1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. It rained heavily in chennai again

சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கும் மழை...

Chennai
சென்னையில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ளது.


 

 
தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை பொழிவது மகிழ்ச்சி என்றாலும், பல இடங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
அந்நிலையில், இன்று காலை சென்னையின் பல பகுதிகளில் வெயில் அடிக்கத் தொடங்கியது. எனவே இன்று மழை பெய்யாது என பலரும் கருதினர். இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மிதமான மழையாக தொடங்கி, அதன் பின் குறைந்தது ஒரு மணி நேரம் சென்னையின் பல இடங்களிலும் மழை பெய்தது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
இன்னும் 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிவிப்பு