1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (19:05 IST)

நகைக்கடன் வாங்கிய எல்லோரின் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தகவல்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, கூட்டறவு சங்கங்களில் கடன் பெற்ற தகுதியான நபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த நபர்களின் கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், முகவரி, செல்போன் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்படடு கணிணி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில், தமிழகக் கூட்டுறவுவங்கிகளில்  சவரன் வரை   நகைகள் அடமானம் வைத்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் மற்றும் அதுக்கு குறைவாக நகைக்கடன் வாங்குன எல்லோரின் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்றும் சுமார் ரூ.14.40பேருக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.