வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (16:56 IST)

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ .பெரியசாமி முக்கிய அறிவிப்பு

வரும் மார்ச்  31 ஆம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு ரூ.6000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ . பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14.40 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ், 5 சவரன்  நகை திருப்பித்தரப்படும் எனவும் விடுபட்டுள்ள தகுதியான நபர்கள் இதற்கு விண்ணப்பித்தால் நகைக்கடன் தளுபடி செய்யப்படும் எனவும் பல கட்டச் சோதனைகள் மூலம் நகைக்கடன் அனைத்தும் கணகீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், போலி ஆவணம், போலி நகைகள் மூலம்  னைஅக்கடன் பெற்ற நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.