ஞாயிறு, 23 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 மார்ச் 2025 (12:32 IST)

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

shock
சென்னையில் 14 வயது பள்ளி மாணவி செல்போனில் சார்ஜ் போடும் போது ஷாக் அடித்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை எர்ணாவூர் பகுதியில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா, தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது திடீரென மின்சாரம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால்தான் மின்சாரம் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
செல்போன் சார்ஜ் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் சார்ஜர் பயன்படுத்த வேண்டும், பிளக் பாயிண்ட்டை இணைக்கும் முன்பாகவே சுவிட்சை ஆன் செய்யக்கூடாது, மற்றும் ஈர கையுடன் செல்போன் சார்ஜ் செய்யக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva