திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (23:48 IST)

நகைக்கடன் தள்ளுபடி : நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திரும்பப் பெறலாம்- அமைச்சர் சக்கரபாணி

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில்         நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

 இந்நிலையில் திண்டுக்கல் அருகே நத்தத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கடன் தள்ளுபடியான  நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திரும்பப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.