ஞாயிறு, 23 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 மார்ச் 2025 (14:45 IST)

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் சாதிய ஆணவ படுகொலைக்கு காரணம் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் போன்றவர்கள்தான் என எச்.ராஜா குற்றம் சாட்டி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பாஜக மூத்த உறுப்பினரான எச்.ராஜா தொடர்ந்து பல்வேறு சர்ச்சை பேச்சுகளால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எச்.ராஜா கலந்துக் கொண்டார்.

 

அப்போது தமிழ்நாட்டில் சாதி ஆணவ படுகொலைகள் குறித்து பேசிய அவர் “தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன் தான். திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன்பும் தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவர்கள் வன்முறையை தூண்டி விடுகின்றனர்” என பேசியுள்ளார்.

 

எச்.ராஜாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K