1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:02 IST)

ஜீரோ வரி பட்ஜெட் சாத்தியமா?

வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி. 

 
தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இன்று தமிழக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை ஆகிய இரண்டும் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் உள்ளது என்றும் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனிடையே நிதியமைச்சர், வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி பட்ஜெட் அர்த்தமற்றது. சரியான வரி வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.