தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை மையம் விரிவாக தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு பருவக்காற்று, வெப்பப்சலனத்தால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், தென்காசி, கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.