திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (15:27 IST)

திமுக கூட்டணியில் திருமா வளவனை மட்டும் ஒதுக்குவது ஏன்? ஆவேசமாகும் விடுதலை சிறுத்தைகள்!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை மட்டும் வேட்பாளர்கள் நிராகரிப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது வேட்பாளர்கள் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் திருமாவளவனின் பெயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடி ஆகியவற்றை பிரச்சாரத்தின் போது வேண்டுமென்றே தவிர்ப்பதாக சொல்லப்படுகிறது.

சில வேட்பாளர்கள் சுவரில் எழுதும் விளம்பரங்களில் கூட கூட்டணிக் கட்சி தலைவர்களின் பெயர்களைப் போட்டு அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று எழுதுகின்றனர். ஆனால் அதிலும் திருமாவளவனின் பெயர் இடம்பெறவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஆவேசம்  அடைந்துள்ளனர்.