திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (08:43 IST)

பினராயி விஜயனை எதிர்த்துப் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர்கள் தயக்கம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் நிற்கும் தர்மடம் தொகுதியில் அவருக்கு எதிராக இன்னமும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கவில்லை.

கேரளாவில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி 140 தொகுதிகளுக்கும் தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் தர்மாதம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுத்தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். அவருக்கு எதிராக பாஜக முன்னாள் தலைவர் சி.கே.பத்மநாபன் நிறுத்தப்பட்டுள்ளார்

ஆனால் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனுத்தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பினராயி விஜயனை எதிர்த்து நிற்க காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தயக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனாலேயே இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளதாம்.