புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (13:21 IST)

தாமகவில் இருந்து விலகிய ஞானசேகரன், திமுகவுக்கு ஆதரவு!

தாமகவில் இருந்து விலகிய ஞானசேகரன், திமுகவுக்கு ஆதரவு!
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தமாகவு 6 தொகுதிகள் வழங்கப்பட்டன என்பதும் 6 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜிகே வாசன் ஒப்புக் கொண்டார் என்பதும் தெரிந்ததே. தமாவுக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஆறு தொகுதிகள் பின்வருமாறு: 1. திருவிக நகர், 2. ஈரோடு கிழக்கு, 3. லால்குடி, 4. பட்டுக்கோட்டை, 5. தூத்துக்குடி, 6. கிள்ளியூர்
 
இந்த நிலையில் தனக்கு திருவிக நகரில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தாமாக பொதுச் செயலாளர் ஞானசேகரன் அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். இதுகுறித்து நேற்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஞானசேகரன் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக திருவிக நகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார் என்பதும் ஆனால் அவருக்கு ஜிகே வாசன் சீட் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தாமகவில் இருந்து விலகிய ஞானசேகரன், திமுகவுக்கு ஆதரவு!