1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2018 (18:30 IST)

உதயநிதி என்பது தமிழ் பெயரா? சும்மா ஒரு டவுட்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமாக்களில் நடித்து வந்தார். அவர் தற்போது திமுகவில் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.
 
திமுக சமீப காலமாக நடத்தி வரும் போராட்டங்களில் கலந்துகொள்ளும் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினும் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். திமுக மேடைகளில் பேசி வருகிறார்.
 
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உதயநிதியின் பெயர் குறித்து சந்தேகம் ஒன்றை எழுப்பியுள்ளார். திமுக தமிழ், தமிழ் என அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாலும், இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் அவர் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

 
எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் உதயநிதி என்பது தமிழ் பெயரா? சும்மா ஒரு டவுட் என பதிவிட்டுள்ளார். உதய மற்றும் நிதி இந்த வார்த்தைகள் சமஸ்கிருத மொழியில் உள்ளவை எனவே உதயநிதி என்பது சமஸ்கிருத பெயர் என சிலர் அவரது டுவிட்டரில் கம்மெண்ட் செய்துள்ளனர். அதே நேரத்தில் சர்மா என்ற எச்.ராஜாவின் பெயரும் தமிழ் பெயரா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.