வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (17:49 IST)

பேருந்து கட்டணத்தை குறைத்தது அயோக்கியத்தனமானது: திமுக பேச்சாளர் அதிரடி!

தமிழக அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால், அதனை காப்பாற்ற பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு என்பது இரு மடங்கு அதிகமாகும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த பேருந்து கட்டன உயர்வை கண்டித்து, மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க நெருக்கடியை கொடுத்து வருகிறது.
 
இந்த போராட்டங்கள் காரணமாக அரசும் பேருந்து கட்டணத்தை குறைக்க முன் வந்தது. ஆனால் குறைக்கப்பட்ட கட்டணம் மிகக்குறைவு என்பதால் மேலும் அதிருப்தி அதிகரித்துள்ளது. பல ரூபாய்க்கள் பேருந்து கட்டணத்தை அதிகரித்து விட்டு 1 ரூபாய் குறைத்தால் எந்தவகையில் நியாயம்.
 
இந்நிலையில் திமுக இந்த போராட்டங்களை மேலும் வேகமாக முன்னெடுத்து வருகிறது. பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு இது குறித்து பேட்டியளித்த திமுக செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா அரசை கடுமையாக சாடியுள்ளார்.
 
100 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணத்தை திடீரென 300 ரூபாய்க்கு உயர்த்திவிட்டு, போனாப்போகுது என்பதுபோல 2 காசு குறைக்கிறோம், 5 காசு குறைக்கிறோம், 10 காசு குறைக்குறோம் என சொல்வது அயோக்கியத்தனமானது என திமுகவின் தமிழன் பிரசன்னா கூறியுள்ளார்.