1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (15:55 IST)

திருடர்களுக்கு குறிப்பு கொடுத்த வீட்டு உரிமையாளர்

இன்றைய நவீன உலகத்தில், நாகரிகமும் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே போகும் வேலையில், குற்றச் செயல்களும் கொண்டே போகிறது. அதே வேலையில் பணத்திறகாகவும், சொத்துக்காகவும் சில மனித மிருகங்கள், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மக்கள் பெரும்பாடு பட்டு சேர்க்கும் பணம் மற்றும் நகைகளை, திருடர்கள் எளிதாக கொள்ளையடித்து செல்கின்றனர். இதனால் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கொள்ளை சம்பவம் நாளுக்கு நாள் அதிரித்து கொண்டே போகிறது. 
 
இந்நிலையில் கம்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் வெளியூர் சென்றுள்ளார். அவரது வீட்டின் முன்பாக திருடர்களுக்கான தகவல் பலகையை வைத்துள்ளார். அதில் இந்த வீட்டில் உள்ள நகைகளெல்லாம் கம்பம் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் நகை திருட வருபவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர் என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.