வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2024 (10:54 IST)

தீபாவளிக்கு முதல் நாளும் அரசு விடுமுறையா? பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Diwali

தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 30ம் தேதியும் அரசு விடுமுறை அளிக்க வேண்டுமென சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்போதே மக்கள் ஆடைகள், பட்டாசுகள் வாங்க தொடங்கியுள்ளனர். அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வரும் நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமைக்கு மீண்டும் பணி நிமித்த சென்னை திரும்ப வேண்டிய சங்கடம் உள்ளதை கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 30 அன்றும் விடுமுறை அளித்தால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

 

அக்டோபர் 30ம் தேதி அரசு விடுமுறை அளிக்கக் கோரி சிவகாசி பட்டாசி உற்பத்தியாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Edit by Prasanth.K