புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:19 IST)

கனமழை முன்னெச்சரிக்கை; மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்!

assembly

தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 

 

அரப்பிக்கடல் பகுதியில் லட்சத்தீவை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுபெற்று வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் 12ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

அதன் காரணமாக வருகிற 16ம் தேதி முதல் தமிழகத்தில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் மூலமாக தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

அதில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, மாவட்ட அளவில் உள்ள அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K