ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (19:34 IST)

சூர்யா மிரட்டப்பட்டாரா? 'கப்சிப்' ஆனதற்கு காரணம் என்ன?

சமீபத்தில் ஒரு விழாவில் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா ஆவேசமாக ஒரு சில கருத்துக்களை தெரிவித்தார். சூர்யாவின் இந்த கருத்துக்கள் வன்முறையை தூண்டிவிடும் வகையில் இருப்பதாக பாஜக தரப்பில் இருந்து ஹெச்.ராஜா விமர்சனம் செய்தார். அதேபோல் புதிய கல்விக் கொள்கை குறித்து புரியாதவர்களிடம் பேசி பயனில்லை என்று தமிழிசையும் சூர்யாவை விமர்சனம் செய்தார்.
 
இதையெல்லாம் விட ஒரு படி மேலே போய் அமைச்சர் கடம்பூர் ராஜூ 'சூர்யா ஒரு அரைவேக்காட்டு மனிதர்' என்று பகிரங்கமாக விமர்சனம் செய்தார். அரசியல்வாதிகள் மாறி மாறி இவ்வளவு கடுமையாக விமர்ச்னம் செய்தும் சூர்யா தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலடியும் கொடுக்கப் படவில்லை. ஆனால் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு நீண்ட அறிக்கையை சூர்யா தயார் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது அவருக்கு  ஒரு முக்கிய அமைச்சரிடம் இருந்து போன்கால் வந்ததாகவும், அதில் சூர்யா மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனுக்கு தமிழக அரசு தரப்பில் இருந்து நிறைய உதவிகள் கிடைத்து வரும் நிலையில் தேவையில்லாமல் அரசை பகைத்து கொண்டால் அகரம் பவுண்டேஷனில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு சூர்யா அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே அஜீத் விஜய் கமல்ஹாசன் உள்பட முக்கிய நடிகர்கள் தமிழக அரசால் கடந்த காலத்தில் மிரட்டப்பட்டனர். அந்த வகையில் தற்போது சூர்யாவும் மிரட்டப்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது