திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (13:43 IST)

மினிமம் ரூ.1,000, மேக்சிமம் ஒரு லட்சம்: டிராபிக் ரூல்ஸ மீறதீங்கடா...

ரூ.1,000-த்தில் துவங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை டிராபிக் ரூல்ஸ் மீறுவோருக்கு அபராதத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 
 
சாலை விபத்துக்களை குறைக்கும் பொருட்டு தண்டனை மற்றும் அபராதத்தை கடுமையாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி மோட்டார் வாகன சட்டத் திருத்தம் 2019-க்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
 
மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்:  
1. ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் 
2. சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை, வாகன பதிவு ரத்து மற்றும் ரூ.25,000 அபராதம் 
3. ஓட்டுநர் உரிமத்தை வைத்திராமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் 
4. வாகனக் காப்பீட்டு நகல் வைத்திராவிட்டால் ரூ.2,000 அபராதம் 
5. போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் 
6. அதிவேகத்தில் வாகன்ம ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம்
7. சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாமலோ பயணித்தால் ரூ.1,000 அபராதம் 
8. போக்குவரத்து விதி மீறும் வாடகைக் கார் சேவை நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் அபராதம், 
9. வாகனங்கனில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20,000 அபராதம் 
10. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்