திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (18:01 IST)

அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன லூசா? முன்னாள் திமுக அமைச்சர் விமர்சனம்

அமைச்சர் செல்லூர் ராஜூ சர்க்கரை விலை உயர்வு பற்றி கூறிய கருத்துக்கு முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவரை விமர்சித்துள்ளார்.


 

 
அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது குறித்து அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி இருந்தார். இந்நிலையில் செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரை விமர்சனம் செய்துள்ளார். கே.என்.நேரு கூறியதாவது:-
 
சர்க்கரை விலை உயர்வால் ஏழைகள் படும் துயரம் பற்றி அறியாமல் கருத்துகளை கூறும் அமைச்சர் செல்லூர் ராஜூ லூசா?. மாதம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அவருக்கு சர்க்கரை விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு தெரியாமல் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.