1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (17:53 IST)

இரட்டை இலை விவகாரம்: தினகரன் தரப்புக்கு மேலும் ஒரு வாய்ப்பு

அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் குறித்த இறுதி விசாரணை இன்று நடைபெற்று வருவதால் இன்றுடன் விசாரணை முடிந்து இரட்டை இலை யாருக்கு என்பது குறித்த தீர்ப்பு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தினகரன் தரப்புக்கு புதிதாக பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளதால் இன்றுடன் விசாரணை முடிய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது



 
 
இந்த நிலையில் நீளமான வாதங்களை முன்வைத்து தினகரன் தரப்பினர் நேரத்தை விரயமாக்குவதாக தேர்தல் ஆணையத்தில்  ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 
 
இந்த நிலையில் தினகரன் தரப்புக்கு புதிதாக பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளதாகவும், விரைவில் புதிய மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தகவல் அளித்துள்ளார்.
 
மேலும் இந்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தபோது, 'இரட்டை இலை விவகாரத்தில் இறுதி உத்தரவையே எங்களிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் உறுதியளித்துள்ளனர்.