புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (08:43 IST)

ரஜினி பாஜக ஆதரவாளரா? உண்மையை புட்டு புட்டு வைத்த சு.சுவாமி!

ரஜினி பாஜக ஆதரவாளரா? உண்மையை புட்டு புட்டு வைத்த சு.சுவாமி!
சுப்பிரமணியன் சுவாமியிடம் ரஜினி பாஜக ஆதரவாளரா என கேட்கப்பட்டதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 
 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நடிகர் ரஜினிகாந்த் பாகவுக்கு ஆதரவாக பேசுகிறாரே, அவர் பாஜகவுக்கு ஆதரவளிப்பாரா? என கேட்க்கப்பட்டது. அதற்கு சு.சுவாமி கூறிய பதில் பின்வருமாறு... 
 
ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இதுவரை வரவில்லை. எல்லாம் வெறும் நாடகம். மேலும் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றால் மும்மொழி கொள்கை பற்றி பேச வேண்டும். சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று கூற வேண்டும்.
ரஜினி பாஜக ஆதரவாளரா? உண்மையை புட்டு புட்டு வைத்த சு.சுவாமி!
ஆனால், ரஜினி இதை எதை பற்றியுமே வாயே திறக்கவில்லை. சரி அப்படி அவர் பாஜகவுக்கு ஆதரவாக என்ன பேசுகிறார்? எதை வைத்து ரஜினி பாஜகவுக்கு ஆதரவளிப்பார் என கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என பதிலளித்தார்.
 
இதர்கு முன்னர் ரஜினியை ஒரு படிக்காத முட்டாள் என்றும் அவன், இவன் என்றும் ஒருமையில் பேசி சர்ச்சை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.