தொடர்புடைய செய்திகள்
- 100 சதவீதத்துக்கு மேல் ஒத்துழைப்போம் – அதிமுக ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் ஆதரவு !
- அதிமுக கொடியில் இருப்பது அண்ணாவா? அமித்ஷாவின் தாத்தாவா? முரசொலி தலையங்கம்
- ஆட்சிக்கவிழ்ப்பு இப்போதைக்கு வேண்டாம்: திமுக அதிர்ச்சி முடிவு
- பாஜகவை வீழ்த்த கார்ப்பரேட் நிறுவனத்துடன் கைகோர்த்த மம்தா!
- அதிமுகவை வெளியேற்றுகிறதா பாஜக? அதிர்ச்சியில் அமைச்சர்கள்
ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் பாஜக: பிடி கொடுக்க திணறும் அதிமுக!!
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும் என பாஜக அதிமுகவை நெருக்குகிறதாம்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் அமோக வெற்றி பெற்ற பாஜக, தமிழகத்தில் மண்ணை கவ்வியது. இந்த தோல்விக்கு அதிமுகவே காரணம் என்பதுதான் பாஜக தலைமையின் எண்ணமாக உள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு காட்டிய முக்கியத்துவத்தை மக்களவை தேர்தலில் அதிமுக காட்டவில்லை என்பதால் அதிமுக மீது கடும் அதிருப்தியில் பாஜக தலைமை உள்ளது.
எனவே, பாஜக எம்பி தேர்தலில்தான் கோட்டை விட்டுவிட்டோம், இந்த தேர்தலிலாவது ஜெயித்து காட்டலாம் என நாங்குநேரியில் பாஜக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என அதிமுகவை நெருக்குகிறதாம்.
அப்படி போட்டியிட்டு ஜெயித்துவிட்டால் பாஜக சார்பில் ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என கணக்கு போட்டுள்ளதாம் பாஜக தரப்பு. ஆனால், இது குறித்து எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் பதிலும் செல்லாமல் அமைதி காக்கிறதாம் அதிமுக தரப்பு.
அடுத்த கட்டுரையில்
