வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (14:41 IST)

பாஜகவை மதிக்காத அதிமுக: ஏன் இந்த திடீர் எதிர்ப்பு?

பாஜகவிற்கு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை கொடுக்க விருப்பமில்லாமல் அதிமுக வேட்பாளரை கிட்டதட்ட உறுதி செய்துள்ளதாம். 
 
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 
 
எனவே, பாஜக எம்பி தேர்தலில்தான் கோட்டை விட்டுவிட்டோம், இந்த தேர்தலிலாவது ஜெயித்து காட்டலாம் என நாங்குநேரியில் பாஜக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என அதிமுகவை நெருக்குகிறதாம்.
அப்படி போட்டியிட்டு ஜெயித்துவிட்டால் பாஜக சார்பில் ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என கணக்கு போட்டுள்ளதாம் பாஜக தரப்பு. ஆனால் அதிமுக, எதையும் காதில் வாங்காமல் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. 
 
ஆம், நாங்குநேரியில் அதிமுக சார்பாக போட்டியிட வேட்பாளரை கூட கட்சி கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாம். அதிமுக பிரச்சார பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் அன்பழகன்தான் வேட்பாளராக இறங்குவார் என தெரிகிறது. 
 
நாங்குநேரி பகுதியில் ஐயா வழி நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர். அதனால்தான் இதே சமுதாயத்தை சேர்ந்த நாஞ்சில் அன்பழகனை வேட்பாளராக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.