செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (15:19 IST)

தேமுதிக உங்க கூட்டணியில் இருக்கா? மழுப்பல் பதில் சொன்ன தினகரன்!

தேமுதிக தங்கள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கடைசி நேரத்தில் விலகியது. தேமுதிக 23 தொகுதிகள் வரைக் கேட்டதாகவும் அதிமுக 13 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்ததால் தேமுதிக விலகியுள்ளது. இதனால் தேமுதிகவின் நிலைமை இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. திமுக கூட்டணியோடும் அமமுகவோடும் அதன் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் ‘எங்களுடன் பல கட்சிகள் கூட்டணி குறித்து பேசுகின்றனர். அதையெல்லாம் வெளியில் சொன்னால் நன்றாக இருக்காது. அவர்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்கும்.இதில் பெரிய சீக்ரெட் எல்லாம் ஒன்றும் இல்லை. பேசி முடித்ததும் அறிவிப்போம்’ என மழுப்பலாக பேசியுள்ளார்.