வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (15:05 IST)

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

chennai school
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
 
இண்டர்போல் மூலம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ-மெயில் நிறுவனம் இந்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு இந்த தகவலை அனுப்பியுள்ள்ளது.
 
மேலும் பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட விவரங்களை வைத்து அந்த நாட்டிடம் விவரங்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டை சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
 
விபிஎன் சேவையை பயன்படுத்தி இ-மெயில் அனுப்பினாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran