1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (08:26 IST)

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் உதவியை நாட காவல்துறை முடிவு!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் குற்றவாளியை கண்டுபிடிக்க தமிழக காவல்துறை இண்டர்போல் அமைப்பை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவ மாணவிகளை அவசர அவசரமாக அவருடைய பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரே இமெயிலில் இருந்து வந்ததை தமிழக காவல்துறை கண்டுபிடித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி மிரட்டல் விடுத்த மர்மன் நபரின் ஐபி முகவரியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில்,  வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் இதற்காக இன்டர்போல் உதவியை நாட இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva