1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. schools holiday in coimbatore district valparai area

கனமழை எதிரொலி.. பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்..!

கோவை
கடந்த சில நாட்களாக கோவை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கோவை நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதலே கோவை பகுதியில் கன மழை பெய்து வருவதன் காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என  கோவை மாவட்ட ஆட்சியர் கிகாந்தி குமார் என்பவர் அறிவித்துள்ளார். 
 
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தக்காளி விலை இன்று மீண்டும் ரூ.20 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!