1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. India corona daily cases register 2 thousand

2 ஆயிரத்தில் நீடிக்கும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்

India Corona Crisis
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,31,29,563 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,303 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,89,841 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 15,419 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மீண்டும் 1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி