1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. independent candidate get six votes in erode election

வாக்களித்த 6 பேருக்கு நன்றி: 233வது முறையாக தோல்வி அடைந்த வேட்பாளர் அறிவிப்பு..!

padmarajan
வாக்களித்த 6 பேருக்கு நன்றி: 233வது முறையாக தோல்வி அடைந்த வேட்பாளர் அறிவிப்பு..!
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு 6 வாக்குகள் மட்டுமே பெற்ற வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களித்த 6 பேர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். எந்த தேர்தல் என்றாலும் அதில் போட்டியிடும் வழக்கத்தை உடையவர் பத்மராஜன். தேர்தல் மன்னன் என்று இவருக்கு ஒரு பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வழக்கம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அவர் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலிலும் அவர் வழக்கம் போல் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவருக்கு ஆறு வாக்குகள் கிடைத்துள்ளது. இருகுறித்து அவர் கூறியபோது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எனது 233 வது தோல்வி என்றும் இந்த தோல்வி எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த 6 பேருக்கு நன்றி என்று கூறிய சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் இனிவரும் தேர்தலில் நான் தொடர்ந்து போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார். 
 
233 முறை தோல்வி அடைந்து இந்த தோல்வி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய தேர்தல் மன்னன் பத்மராஜன் கருத்து ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
எழுத்தாளர் கோணங்கி மீது பாலியல் குற்றச்சாட்டு: மீண்டும் எழுந்த 'மீ டூ' விவாதம்