1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (11:42 IST)

மாமியாரிடம் தோல்வி அடைந்த மருமகன்.. திரிபுரா தேர்தலில் வினோதம்..!

tripura
மாமியாரிடம் தோல்வி அடைந்த மருமகன்.. திரிபுரா தேர்தலில் வினோதம்..!
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் மாமியாரிடம் மருமகன் தோல்வி அடைந்த தகவல் தெரிய வந்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. மார்க்கிஸ்ட் 11 இடங்களிலும் காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா மீண்டும் திரிபுரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் பதார்கார்டு என்ற தொகுதியில் மீனா ராணி என்பவரும் அவருடைய மருமகன் ரஞ்சன் சர்க்கார் என்பவரும் போட்டி விட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் தனக்கு எதிராக போட்டியிட்ட மருமகன் ரஞ்சன் சர்காரை விட மாமியார் மீனா ராணி 1289 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முயற்சி செய்த நிலையில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டுக்கு அந்த இடம் இந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால் அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran