திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 16 மே 2022 (15:47 IST)

சென்னையில் இன்னும் சில நிமிடங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு!

rain
சென்னையில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
 
சென்னையில் இன்று 27 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது  என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் கூறியுள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்த நிலையில் புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
 
இந்த் நிலையில் தற்போது மீண்டும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது