வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 மே 2022 (15:47 IST)

நெல்லை கல்குவாரி விபத்து: காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க விஜயகாந்த் கோரிக்கை

vijayakanth
நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தில் ஊழியர்கள் சிக்கியுள்ள நிலையில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்க மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
விபத்து ஏற்பட்டு பல மணி நேரமாகியும் மீட்ப்ப்பணியை தொடங்காமல் அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகளும் தமிழக அரசுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ள விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்