வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (14:37 IST)

பிரசவ அறுவை சிகிச்சையில்... பெண்ணின் வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள் !

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களுக்கு  முன் பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, அங்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு,  ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் தொடர்ந்து பெண்ணுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதால்  அவரை புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரசவத்தின் போது, மருத்துவர்கள் பிரியாவின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததே அவர் உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.