புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (12:55 IST)

திருமணத்துக்கு மறுத்த மாணவி! – தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

திருமணத்துக்கு மறுத்த 10வது படிக்கும் சிறுமியை தாயே அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு வந்த தினேஷ் ரூபன் என்பவர் மாணவியை மணந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடமே கூறியிருக்கிறார். ஆனால் மாணவியும், அவரது தந்தையும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் மாணவியின் தாயாரிடம் நைச்சியமாக பேசிய தினேஷ் ரூபன் திருமணத்திற்கு மாணவியை சம்மதிக்க வைக்க சொல்லியிருக்கிறார். மாணவியை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்க மாணவியின் தாய் தொடர்ந்து அவரை துன்புறுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இந்த திருமண விவகாரம் பெரிதாகவே கோபத்தில் தாயே மகளுக்கு பல இடங்களில் சூடு வைத்துள்ளார். தனது மனைவி செய்யும் கொடுமைகளை கண்டு தாங்க முடியாத தந்தை போலீஸாரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாணவியின் தாயாரையும், தினேஷ் ரூபனையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.