புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (18:40 IST)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை – 7 மாதத்துக்குப் பிறகு கொலைகாரன் கைது !

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கொலை செய்த சற்குணம் என்பவர் 7 மாதத்துக்குப் பிறகு பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரூபினி. கணவரைப் பிரிந்துள்ள இவர் 3 வயது குழந்தையுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சற்குணம் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட அவர்களோடு ஒன்றாக வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் நிரந்தர வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட இவர்களுக்கு குழந்தை மேலும் இடையூறாக இருந்துள்ளது. தங்கள் சல்லாபத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வந்த குழந்தையை கொலை செய்துவிடலாம் என சற்குணம் சொல்ல, முதலில் மறுத்த ரூபினி பின்னர் சம்மதித்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்ற அவர்கள் குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து பின்னர் புதரில் போட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு ரூபினி கைது செய்யப்பட்டார். இதையடுத்து 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த சற்குணம் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.