புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (09:07 IST)

தாயின் திருமணத்துக்குத் தடையாக இருந்த குழந்தை – நடந்த கொடூரம் !

தனது தாயின் திருமணத்துக்குத் தடையாக இருந்த 2 வயது குழந்தை கொன்று வீசப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

மஞ்சுளா என்ற இளம்பெண் இரு முறை திருமணம் செய்துகொண்டு இருவரையும் பிரிந்துள்ளார். அவருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்த திருமணம் செய்துகொள்ளலாம் என நினைக்க அதற்கு கைக்குழந்தை தடையாக இருக்குமோ என அஞ்சியுள்ளார். இதனால் குழந்தையை கொலை செய்து அருகில் உள்ள மலையடிவாரத்தில் வீசிவிட்டு குழந்தையைக் காணவில்லை எனப் போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கம்மான்பேட்டை பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நேற்று முன் தினம் அழுகிய நிலையில் குழந்தை சடலம் கிடைக்க போலிஸார் நடத்திய விசாரணையில் அது மஞ்சுளாவின் குழந்தை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலிஸ் விசாரணையில் மஞ்சுளா சொன்ன பதில் முரணாக இருந்ததால் சந்தேகம் அதிகமாகியுள்ளது. அதன் பின்னர் நடத்திய விசாரணையில் மஞ்சுளா குழந்தையை தான் தான் கொன்று வீசியதாக உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.