திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 மே 2018 (18:14 IST)

சென்னை: சேத்துப்பட்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்த 3 பேரும் கட்டிட பணியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் என கூறப்படுகிறது.
 
மேலும், சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.