வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (17:52 IST)

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு கோபத்தை வெளிப்படுத்திய ரஜினி!

தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கோபத்துடன் பதிலளித்தார்.

 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று காலை ரஜினிகாந்த நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இளைஞர் யார் நீங்கள்? என்று கேட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு கடும் கோபத்துடன் பதிலளித்தார்.
 
சமூக விரோதிகள் காவல்துறையினரை தாக்கியதால்தான் பிரச்சனை ஆரம்பித்தது. தமிழக மக்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாவிடும் என்று கூறினார்.