1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (07:40 IST)

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மூன்று மாடி கட்டிடம் இருந்தது. அந்த மூன்று மாடி கட்டிடமானது நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய பலர் தங்களை காப்பாற்றுமாறு சத்தமிட்டனர்.
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.