வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (19:35 IST)

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து காமெடி நடிகர் போட்டி?

தமிழகத்தில் தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது என்பதும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் குறித்த பணிகளுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் திமுக விருப்ப மனுக்களை பெற்று வந்த நிலையில் தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வந்தனர் 
 
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு கொடுத்துள்ளார். அவருக்கு முதல்வரை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்