மதியம் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு! – வன்னியர்கள் இட ஒதுக்கீடு அறிவிப்பா?

edapadi palanisamy
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதியம் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை தமிழகத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இந்நிலையில் முன்னதாக இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் குழுக்கடன் ரத்து உள்ளிட்டவற்றை முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேச உள்ளார்.

இதனால் முக்கியமான வேறு சில திட்டங்கள் அல்லது நீண்ட கால பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :