1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Will Kushboo compete against Udhayanidhi Stalin

உதயநிதியை எதிர்த்து தேர்தல் களம் காணுவாரா குஷ்பூ??

உதயநிதி
சென்னை சேப்பாக்கம் – திருநெல்வேலி தொகுதியில் உதயநிதிக்கு எதிராக குஷ்பூ போட்டியிடுவாரா என கேள்வி எழுந்துள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கூட்டணி முடிவுகளுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் பிஸியாகிவிட்ட திமுக தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் – திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். திமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படுகிறது இந்த தொகுதிகள்.
 
ஏற்கனவே இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவில் இணைந்த குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார். இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது, இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேனா என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் உதயநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டால் சந்தோஷம் என்றார்.
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மட்டும்தான் திருக்குறள் சொல்வாரா? – திருக்குறளை கையிலெடுத்த ராகுல்காந்தி!