#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (11:45 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #மன்னிப்பாவது_ம*ராவது என்ற ஹேஷ்டேக் கமலுக்கு ஆதரவாக டிரெண்டாகி வருகிறது. 

 
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வரும் அவர், திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறிவிட்ட நிலையில் வேறு எந்தவொரு கட்சியோடும் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. 
 
இந்நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ‘நான் ஆக்டிவ்வாக இருக்கும் வரைதான் அரசியலில் இருப்பேன். சக்கர நாற்காலி காலம் வரை எல்லாம் இருந்துகொண்டு உங்களுக்கு தொல்லைக் கொடுக்க மாட்டேன்’ எனக் கூறினார். 
 
சக்கர நாற்காலி என்று சொன்னது தங்கள் தலைவர் கலைஞரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக திமுகவினர் இப்போது கமல்ஹாசனுக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பியுள்ளனர். மேலும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திமுகவினர் கோரிவந்ததனர். 
 
அதையடுத்து கமல்ஹாசன் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவரது முதுமை குறித்து விமர்சிக்கவில்லை. என்னுடைய முதுமை குறித்து மட்டுமே பேசினேன் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் #மன்னிப்பாவது_ம*ராவது என்ற ஹேஷ்டேக் கமலுக்கு ஆதரவாக டிரெண்டாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :