தொடர்புடைய செய்திகள்
- எங்க இங்க இருந்த தமிழை காணோம்?: பயணிகள் குழப்பம்!
- என்கூட இருக்கவங்களே இந்துக்கள்தான்! – திருமாவளவன்
- அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்துக்குள்ளான பெண்ணுக்கு இடது கால் நீக்கம் - மற்றொரு காலும் !
- 'தமிழகத்தில் என் மகளுக்கு கொடுமை' ... பேராசிரியர் மோசமானவர்! - முகமது லத்தீஃப்
- 'ஸ்டாலின் கோபம் ... பேச்சு மூச்சு இல்லாத திமுக ’ ... அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் !
ஐஐடி மாணவி தற்கொலை: பேராசிரியர் சுதர்ச பதமநாபன் வெளியேற தடை!
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் சுதர்ச பத்மநாபன் கல்லூரியை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்தீம் கடந்த 9ம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன் தன் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் குறித்து மொபைலில் பதிந்து விட்டிருக்கிறார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தற்போது சிபிஐ விசாரணைக்கு வந்துள்ளது.
மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாத்திமாவின் தந்தை லத்தீம் முதல்வரை சந்தித்து புகார் அளித்தார். இந்நிலையில் பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்களாக கருதப்படும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் பிற பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை முடியும் வரை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற போலீஸார் தடை விதித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
