திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 நவம்பர் 2019 (10:43 IST)

என்கூட இருக்கவங்களே இந்துக்கள்தான்! – திருமாவளவன்

இந்துக்களுக்கு எதிராக திருமாவளவன் பேசி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் அதை மறுத்துள்ளார் திருமாவளவன்.

பாஜக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இதனால் இந்துக்களுக்கு எதிராக திருமாவளவன் பேசுவதாக பலரும் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் “பேராசிரியர்கள் ஏற்படுத்திய மன உளைச்சலால் பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மோடியையும் நான் விமர்சித்து பேசுவதால் பலர் என்னை இந்துக்களின் விரோதியாய் காட்ட முயல்கிறார்கள். உண்மையில் நான் இந்துக்களுக்கு விரோதி கிடையாது. என்னை பின்பற்றுபவர்களில் 80 சதவீதம் மக்கள் இந்துக்கள்தான்” என்று கூறியுள்ளார்.