வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:33 IST)

'ஸ்டாலின் கோபம் ... பேச்சு மூச்சு இல்லாத திமுக ’ ... அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் !

மதுரை மாவட்டத்தில்,  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள், இன்று, ஒரு தனியார் விடுதியில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
உள்ளாட்சி தேர்தலுக்காக முதலில் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்து வந்த எதிர்க்கட்சியான திமுக இப்போது பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது என தெரிவித்தார்.
 
மேலும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளும் அரசைக் குறை கூற திட்டங்கள் போட்டும் அது நடக்கவில்லை. அதனால் ஸ்டாலின் கோபத்தில் உள்ளார் என தெரிவித்தார்.