கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்- சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக தேர்தல் ஆணையம் ஒலிவாங்கி (Mike - மைக்) சின்னத்தையும், நாடாளுமன்றத் தேர்தல் வரைவையும் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒலிவாங்கி (மைக்). கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்.சமரசம் செய்ய மாட்டேன். நாதக வேட்பாளர்களை சுயேட்சையாக நிறுத்தி 40 தொகுதிக்கும், 40 சின்னம்கொடுக்க வேண்டும் என்பது அவர்களது முயற்சி.
உலகப் புரட்சியாளர்கள் அனைவரும் மைக் மூலம்தான் கருத்துகளை கொண்டு சேர்த்துள்ளனர். சிறுபான்மையின மக்களை காப்போம் என்பார்கள். ஆனால் ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவர் கூட வேட்பாளராக இல்லை. சமூக நீதி பெண்ணிய உரிமைகள் பேசுவார்கள் ஆனால் கடைப்பிடிக்க மாட்டார்கள். இதையெல்லாம் நாங்கள் சரியாக செய்கிறோம் என்று நினைத்தால் நீங்கள் என்னை கைவிட்டு விடாதீர்கள் என்று கூறினார்.