திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , புதன், 27 மார்ச் 2024 (08:42 IST)

வீர மங்கை வேலுநாச்சியார் மருது பாண்டியர்கள் வேடமிட்டு- நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
பின்னர் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக .நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார் மருது பாண்டியர்கள் வேடமிட்டு பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை வாசல் வந்து அரண்மனைக்கு முன்பாக உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தனர்.
 
பின்னர் வாரச்சந்தை வீதி வழியாகமாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று பிச்சாரம் மேற் கொண்டனர்.