1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinakaran filed a case for irattai ilai

இரட்டை சின்னம்: தினகரன் எடுத்த அதிரடி முடிவு

dinakaran
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது.
 
இரட்டை இலை சின்னத்திற்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியவை உரிமை கொண்டாடியதால் இதுகுறித்த விசாரணை பல மாதங்கள் நடந்து இறுதியில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சொந்தம் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
 
இந்த நிலையில் இரட்டை இலையையும் அதிமுகவையும் மீட்டே தீருவேன் என்று சூளுரைத்த டிடிவி தினகரன் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இரட்டை இலை சின்ன வழக்கில் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று தினகரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
குமரி அருகே ஓகி புயல்: வர்தா போல் சேதம் உண்டாகுமா?