1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2023 (11:59 IST)

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபரின் மரணம்! – வெளியான அடையாளம்!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நுழைந்து பின் சாலையில் அடிப்பட்டு இறந்த மர்ம நபர் குறித்த அடையாளங்கள் தெரிய வந்துள்ளது.



கடந்த வாரம் கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை அந்த அலுவலகத்தின் காவலாளிகள் அடித்து வெளியே விரட்டிய நிலையில், சில மணி நேரங்கள் கழித்து அந்த நபர் சாலையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சாலையில் சென்ற வாகனம் மோதி அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து அந்த நபரின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன.

இறந்தவர் பெயர் கார்த்திக் என்றும் கடந்த 2004ம் ஆண்டு கேரளாவில் ஒரு திருட்டு வழக்கில் அவர் கைதான விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளது. அவரது குடும்பத்தினரை கண்டுபிடித்து சடலத்தை ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Edit by Prasanth,K